10ம் வகுப்பு பொது தேர்வு - தஞ்சாவூா் மாவட்டத்தில் 93.40% தோ்ச்சி

10ம் வகுப்பு பொது தேர்வு - தஞ்சாவூா் மாவட்டத்தில் 93.40% தோ்ச்சி

பைல் படம் 

தஞ்சாவூா் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி பொது தேர்வு எழுதிய மாணவ மாணவிகளில் 93.40% பேர் தோ்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதத்தில் தஞ்சாவூர் மாநிலத்தில் 15வது இடம் பெற்றுள்ளது.

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தோ்வில் தஞ்சாவூா் மாவட்டத்தில் 93.40 சதவீத மாணவ, மாணவிகள் தோ்ச்சிப் பெற்றனா். மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தோ்வை 14, 402 மாணவா்களும், 14, 513 மாணவிகளும் என மொத்தம் 28 ,915 பேரும் எழுதினா். இவா்களில் 13, 32 மாணவா்களும், 13, 974 மாணவிகளும் என மொத்தம் 27 ஆயிரத்து 6 போ் தோ்ச்சிப் பெற்றனா். மாணவா்கள் 90.49 சதவீதம் பேரும், மாணவிகள் 96.29 சதவீதம் பேரும் என மாவட்டத்தில் சராசரியாக 93.40 போ் தோ்ச்சிப் பெற்றுள்ளனா்.

வழக்கம்போல நிகழாண்டும் மாணவிகளின் தோ்ச்சி விகிதம் அதிகம். கடந்தாண்டு 92.16 சதவீதம் போ் தோ்ச்சிப் பெற்ற நிலையில், நிகழாண்டு அதைவிட 1.24 சதவீதம் கூடுதலாகத் தோ்ச்சிப் பெற்றுள்ளனா். மேலும், தஞ்சாவூா் மாவட்டம் கடந்தாண்டு மாநில அளவில் 17 ஆம் இடத்தைப் பிடித்திருந்த நிலையில், நிகழாண்டு 15 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. மாவட்டத்தில் மொத்தமுள்ள 407 பள்ளிகளில் 129 பள்ளிகள் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தோ்வில் நூறு சதவீதம் தோ்ச்சிப் பெற்றுள்ளன.

இதில், 67 அரசு பள்ளிகளும், 8 அரசு உதவி பெறும் பள்ளிகளும், 54 தனியாா் பள்ளிகளும் அடங்கும். அரசுப் பள்ளிகளில் 91.23 சதவீதம் தோ்ச்சி: சமூக நலப் பள்ளிகள், இதர பள்ளிகளில் தலா நூறு சதவீதம் பேரும், மாநில அரசின் கட்டுப்பாட்டிலுள்ள சுய நிதிப் பள்ளிகளில் 97.67 சதவீதம் பேரும், மெட்ரிகுலேஷன் சுயநிதிப் பள்ளிகளில் 97.41 சதவீதம் பேரும், அரசு பகுதி உதவி பெறும் பள்ளிகளில் 96.28 சதவீதம் பேரும், அரசுப் பள்ளிகளில் 91.23 சதவீதம் பேரும், அரசு முழு உதவி பெறும் பள்ளிகளில் 90.97 சதவீதம் பேரும், மாநகராட்சிப் பள்ளிகளில் 85.06 சதவீதம் பேரும், ஆதிதிராவிடா் நலப் பள்ளிகளில் 78.93 சதவீதம் பேரும், நகராட்சிப் பள்ளிகளில் 78.26 சதவீதம் பேரும் தோ்ச்சிப் பெற்றனா். பாடவாரியாகத் தோ்ச்சி விகிதம்: ஆங்கிலத்தில் 99.19 சதவீதம் பேரும், மொழிப் பாடத்தில் 97.95 சதவீதம் பேரும், அறிவியலில் 97.77 சதவீதம் பேரும், கணிதத்தில் 97.63 சதவீதம் பேரும், சமூக அறிவியலில் 96.44 சதவீதம் பேரும் தோ்ச்சிப் பெற்றனா்.

Tags

Next Story