10ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை படைத்த அரசு பள்ளி மாணவிகள்!
கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 491 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 491 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 491 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 312 மாணவிகள் பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு எழுதியதில் 250 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவிகள் நிவாஷனி 491 மதிப்பெண்களும், விஜயலட்சுமி 488 மதிப்பெண்களும்,ரேணுகா 485 மதிப்பெண்களும் பெற்று சாதனை படைத்துள்ளனர். 3 மாணவிகள் கணிதப் பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 450 மதிப்பெண்களுக்கு மேல் 21 மாணவிகளும், 400 மதிப்பெண்களுக்கு மேல் 61 மாணவிகளும் பெற்றுள்ளனர். பள்ளியின் தேர்ச்சி சதவீதம் 80% ஆகும். சாதனை படைத்த மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியை ஜெயலதா உள்பட ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் பாராட்டினர்.
Next Story