11ஆம் வகுப்பு பள்ளி மாணவிக்கு டார்ச்சர் கொத்தனாருக்கு போக்சோ

X
குமரி மாவட்டம் ஞாலம் என்ற பகுதியை சேர்ந்தவர் ராபின்சன் (42). கொத்தனார் வேலை செய்கிறார். இவர் திட்டுவிளை அருகே ஒரு வீட்டுக்கு கட்டிட வேலைக்கு சென்றுள்ளார். அப்போது அந்த பகுதியில் உள்ள 11-ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு ராபின்சன் டார்ச்சர் கொடுத்ததாக கூறப்படுகிறது. பலமுறை எச்சரித்தும் மாணவியை மீண்டும் தொந்தரவு செய்துள்ளார். இதை அடுத்து பாதிக்கப்பட்ட மாணவி நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி ராபின்சன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story

