11 வயது சிறுவனின் சிகிச்சைக்காக, மருத்துவ காப்பீடு அட்டை பெற உதவிய மாவட்ட கலெக்டர்

X

குமாரபாளையம் 11 வயது சிறுவனின் சிகிச்சைக்காக, மருத்துவ காப்பீடு அட்டையை மாவட்ட கலெக்டர் ஏற்பாடு செய்து கொடுத்தார்.
குமாரபாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் சத்தியராஜ், நந்தினி தம்பதியர். விசைத்தறி கூலி. இவர்களின் மகன் ஸ்ரீதர், 11, இவரது கிட்னியில் பாதிப்பு உள்ளது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். அவர்களிடம் மருத்துவ காப்பீடு அட்டை இல்லாததால், சிகிச்சை செய்வதற்காக மருத்துவ காப்பீடு அட்டை தேவை என்று டாக்டர்கள் கூறியதால், மாவட்ட கலெக்டர் உமா வசம், மக்கள் நீதி மய்யம் மகளிரணி மாவட்ட அமைப்பாளர் சித்ராவுடன், நேரில் சென்று மனு கொடுத்தனர். மாவட்ட கலெக்டர் உமா, உடனடியாக குழந்தையின் மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவ காப்பீடு அட்டை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து உதவி செய்தார்.. இதற்காக சிறுவனின் பெற்றோர் மாவட்ட கலெக்டருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர்.
Next Story