11 நாட்களே ஆன பெண் குழந்தையை விற்க முயன்ற இடைத்தரகர் கைது: கோவையில் அதிர்ச்சி சம்பவம்!

X
கோவை அரசு மருத்துவமனையில் பிறந்த 11 நாட்களே ஆன பெண் குழந்தையை விற்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரகாஷ் - விஜயசாந்தி தம்பதிக்கு கடந்த ஜூலை 25ம் தேதி நான்காவது பெண் குழந்தை பிறந்தது. ஆகஸ்ட் 4ம் தேதி வீடு திரும்பும் போது, ஆனந்தி சிந்து (32) என்ற பெண், அந்த குழந்தையை பெற்று கொண்டு விற்பனை செய்ய திருப்பூர் சென்றுள்ளார். இதைப் பற்றிய தகவல் 1098 குழந்தைகள் நல உதவி எண் மூலம் கிடைத்த நிலையில், மாவட்ட குழந்தைகள் நல மையம் ரேஸ் கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தது. பின்னர், காவல் துறையினர் ஆனந்தி சிந்துவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் சமூகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், குழந்தைகள் பாதுகாப்புக்கான நடவடிக்கைகளை அரசு வலுவாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
Next Story

