சாலையில் சுற்றி திரிந்த 11 மாடுகள் பிடிப்பு
தாம்பரம் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக சாலையில் திரிந்த மாடுகளை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
தாம்பரம் மாநகராட்சி, இரண்டாவது மண்டலம் பல்லாவரத்தில், ஜி. எஸ். டி. , சாலை, நியு காலனி, ராதா நகர் பிரதான சாலை ஆகிய இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறாக மாடுகள் சுற்றித்திரிந்தன. இப்பகுதியில் திரிந்த 11 மாடுகளை, சுகாதார அலுவலர் குமார் தலைமையிலான அதிகாரிகள், நேற்று பிடித்தனர். மண்டல அலுவலகத்தில் கட்டப்பட்ட மாடுகளை, அதன் உரிமையாளர்கள், 2, 000 ரூபாய் அபராதம் செலுத்தி, பிடித்துச் சென்றனர்.
Next Story