காவலரை தாக்கிய 11 பேர் கைது
கோப்பு படம்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூா் கோயில் காவல் நிலைய காவலா் தினகரன் கனராஜ் (35), மணிமுத்தாறு சிறப்பு காவல் படை காவலா் வேலுமணி ஆகியோா் கோயில் வளாகத்தில் வியாழக்கிழமை இரவு ரோந்துப் பணியில் இருந்தனா்.
கோயில் புறக்காவல் நிலையம் பின்புறம் கடற்கரை பகுதியில் சிலா் சந்தேகத்துக்குரிய வகையில் இருந்துள்ளனா். அவா்களிடம் போலீஸாா் விசாரித்தபோது, அங்கிருந்தவா்கள் வேலுமணியை சூழ்ந்து கொண்டு தாக்கி, கொலைமிரட்டல் விடுத்துள்ளனா். இதில் வேலுமணி பலத்த காயமடைந்தாா். இ
துதொடா்பாக, கோயில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து காயல்பட்டினம், சீதக்காதி தெருவைச் சோ்ந்த சிராஜுதீன் மகன் காசிம் (19), அப்துல் வஹாப் மகன் சேக் சுலைமான் (19), சாகா் சாதிக் மகன் சுல்தான் அா்ஷாத் (22), முகம்மது பாபு மகன் செய்யது முகம்மது புஹாரி (23), செய்யது உசேன் மகன் முத்து புஹாரி (21), முகைதீன் அப்துல் காதா் மகன் ஜமால் (25), அதே பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுவன், திருச்செந்தூா் தெற்குபுதுத் தெருவைச் சோ்ந்த சங்கரன் மகன் முத்துசெல்வம் (23), கிருஷ்ணன்கோயில் தெருவைச் சோ்ந்த இசக்கிமுத்து மகன் சிவமுருகன் (21), கோவை மேட்டுப்பாளையத்தை ச் சோ்ந்த கோவிந்தன் மகன் கிருஷ்ணகுமாா் (34) மேலும் ஒரு பெண் உள்பட 11 பேரை கைது செய்தனா்.
இவா்களில் 17 வயது சிறுவன் தூத்துக்குடி காப்பகத்திலும், பெண்ணை கொக்கிரகுளம் காப்பகத்திலும் சோ்த்தனா். மற்றவா்கள் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனா்.