கீழ்வேளூர் அருகே 110 லிட்டர் சாராயம் பறிமுதல்

கீழ்வேளூர் அருகே 110 லிட்டர் சாராயம் பறிமுதல்

பறிமுதல் செய்யப்பட்ட சாராயம்

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே பைக்கில் கடத்தி சென்ற 110 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

புதுச்சேரி மாநிலத்தி லிருந்து நாகை மாவட் டத்தில் உள்ள பிற பகுதிக ளுக்கு சாராயம் கடத்தப்படு வதை தடுக்கும் வகையில் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ்சிங் உத்தரவின் பேரில் போலீ சார் நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில் கீழ்வேளூர் போலீஸ் சரகம் ஆலங் குடி ஊராட்சி நாக விளாகம் சுடுகாடு அருகே கீழ்வேளூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அந்த வழியாக வேகமாக வந்த மோட் டார் சைக்கிளை போலீ சார் நிறுத்த முயன்றனர்.

போலீசாரை கண்டதும் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். மோட்டார் சைக்கிளில் 2 சாக்கு மூட்டை யில் காரைக்கால் பகுதி யில் இருந்து சாராயம் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது.

இது குறித்து கீழ்வேளூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் வழக் குப்பதிவு செய்து கடத்தி வரப் பட்ட 110 லிட்டர் சாராயம் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்த னர். மேலும் தப்பி ஓடிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.-

Tags

Next Story