தர்மபுரி உழவர் சந்தையில் 11,094 டன் பழங்கள் விற்பனை

தர்மபுரி உழவர் சந்தையில் 11,094 டன்   பழங்கள் விற்பனை
உழவர் சந்தை 
தர்மபுரி உழவர் சந்தையில் கடந்த ஆண்டில் 11,094 டன் காய்கறி, பழங்கள் விற்பனையகியுள்ளது.

தர்மபுரி உழவர் சந்தையில், கடந்த ஆண்டு 11,094 டன் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. சுமார் 22.23 லட்சம் நுகர்வோர் காய்கறி, பழங்கள் வாங்கி சென்றுள்ளனர். தர்மபுரியில் கடந்த 2000-ம் ஆண்டு உழவர் சந்தை துவங்கப்பட்டது.

பின்னர், ஏ:ஜெட்டிஅள்ளி, பென்னாகரம், பாலக்கோடு, அரூர் ஆகிய இடங்களில் உழவர் சந்தைகள் திறக்கப்பட்டது. காரிமங்கலத்தில் புதிய உழவர் சந்தை அமைக்கப்பட்டு, விரைவில் திறப்புவிழா காண உள்ளது.

மாவட்டத்தில் மொத்தம் 5 உழவர் சந்தைகள் இயங்கி வருகின்றன. இதில் தர்மபுரி உழவர் சந்தையில், தினசரி சராசரியாக 30 டன் காய்கறி,பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றது. இதன் மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும். தினசரி சுமார் 7ஆயிரம் நுகர்வோர் வந்து காய்கறி, பழங்கள் வாங்கி செல்கின்றனர்.

தர்மபுரி உழவர் சந்தையில் கடந்த ஆண்டு 11,094 டன் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதில் 10,230 டன் காய்கறிகளும், 864 டன் பழங்களும் அடங்கும். மொத்தம் ரூ.37.43 கோடி அளவிற்கு காய்கறி, பழங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

நுகர்வோர்கள் 22 லட்சத்து 23 ஆயிரத்து 15 பேர் காய்கறிகளை வாங்கி பயனடைந்துள்ளனர். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், 'தர்மபுரி உழவர் சந்தையில், தினசரி சுமார் 64 டன் காய்கறி, பழங்கள் விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு மாதத்திற்கு 1920_டன் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை என சுமார் ரூ.5.80 கோடிக்கு விற்பனையாகிறது,' என்றனர்.

Tags

Next Story