ஆத்தூரில் ரூ.1.12 கோடிக்கு பருத்தி வர்த்தகம்

ஆத்தூரில் ரூ.1.12  கோடிக்கு பருத்தி வர்த்தகம்

வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் 

ஆத்தூர் புதுப்பேட்டை வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.1.12 கோடிக்கு பருத்தி வர்த்தகம் நடைபெற்றது.
சேலம் மாவட்டம், ஆத்தூர் புதுப்பேட்டை வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில் ஆத்தூர், கெங்கவல்லி, தலைவாசல், திட்டக்குடி, பெரம்பலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 691 விவசாயிகள் 4611 மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இந்நிலையில் பி.டி.ரகம் குவிண்டால் ரூ. 7,069முதல் ரூ.7,819 வரை, டி.சி.ஹெச்., ரக குவிண்டால் ரூ.9,689 முதல் 11, 889 ரூபாய் வரை, கொட்டு பருத்தி (கழிவு) 3,689முதல் 5,789 வரை விற்பனையானது. மொத்தம் 4611 மூட்டை பருத்தி ரூ.1கோடியே 12 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது.

Tags

Next Story