அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் ரூ.1.14 லட்சம் காணிக்கை
ரிஷிவந்தியத்திலுள்ள அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் ரூ.1.14 லட்சம் காணிக்கை பெறப்பட்டுள்ளது.
ரிஷிவந்தியத்திலுள்ள அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் ரூ.1.14 லட்சம் காணிக்கை பெறப்பட்டுள்ளது.
ரிஷிவந்தியத்தில் 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் காணிக்கை செலுத்த 4 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை சரக ஆய்வாளர் புருஷோத்தமன் மேற்பார்வையில், 5 மாதங்களுக்கு பிறகு கோவிலில் உள்ள உண்டியல்கள் நேற்று திறக்கப்பட்டது. செயல் அலுவலர் அருள், கோவில் பணியாளர்கள் விமல்ராஜ், சக்திவேல், ஆதிகேசவன் மற்றும் சிலர் காணிக்கை பணம் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். அதில், 1 லட்சத்து 14 ஆயிரத்து 795 ரூபாய், 10.5 கிராம் எடையுள்ள தங்கம் மற்றும் 28.9 கிராம் எடை கொண்ட வெள்ளி பொருட்கள் இருந்தது. தொடர்ந்து, காணிக்கை பணம் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.
Next Story