சாப்ட்வேர் கம்பெனி ஊழியரிடம் 11.47 லட்சம மோசடி

சாப்ட்வேர் கம்பெனி ஊழியரிடம் 11.47 லட்சம மோசடி

கோப்பு படம் 

கோவையில் சாப்ட்வேர் கம்பெனி ஊழியரிடம் 11.47 லட்சம மோசடி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் முத்துராமன்(47).சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.இவரது அலைபேசி வாட்ஸ் அப் எண்ணிற்கு பகுதி நேரம் பணியாற்றினால் அதிக வருமானம் பெற முடியும் என குறுஞ்செய்தி கிடைக்கப்பெற்றுள்ளது.

கொடுக்கப்பட்டிருந்த தொடர்பு எண் மூலம் முத்துராமன் பேசியபோது கொடுக்கும் பணியை முடித்துக் கொடுத்தால் அதிக அளவில் லாபம் கிடைக்கும் எனவும் அதற்கு முதலீடு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

இதனை நம்பிய முத்துராமன் பல்வேறு தவணைகளாக 11.47 லட்சம் ரூபாயை அனுப்பி வைத்துள்ளார்.ஆன்லைன் கொடுக்கப்பட்ட வேலைகளை முடித்துக் கொடுக்கபட்ட பின்னரும் கமிஷனும் கிடைக்க பெறாததால் சம்பந்தப்பட்ட நபரை தொடர்பு கொண்டு இதுகுறித்து கேட்டுள்ளார்.

மீண்டும் பணம் செலுத்தினால் மட்டுமே கமிஷன் தொகையுடன் சேர்த்து மொத்த பணத்தையும் வங்கிக் கனவில் வர வைக்க முடியும் என கூறியுள்ளனர். தான் ஏமாற்றப்பட்டதை அறித்த முத்துராமன் இதுகுறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story