தியாக சீலர் கக்கன் 116 ஆவது பிறந்தநாள்
தியாக சீலர் கக்கன் 116 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மேலூர் அருகே சுதந்திர போராட்ட வீரரும், தமிழக முன்னாள் அமைச்சருமான தியாக சீலர் கக்கனின் 116ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா: அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் உட்பட பல்வேறு அதிகாரிகள் மற்றும் அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை...* மதுரை மாவட்டம் மேலூர் அருகே தும்பைப்பட்டியில் 1909 ஆம் ஜூன் மாதம் 18ஆம் தேதி, பூசாரி கக்கன் மற்றும் குப்பி தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தவர் கக்கன்.
தும்பைப்பட்டி , மேலூர் , திருமங்கலம் ஆகிய பகுதிகளிலுள்ள அரசு பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்த இவர். 1939ல் தேசிய இயக்கதில் சேர்ந்து நாட்டின் சுதந்திர போராட்டத்திலும் ஈடுபட்ட நிலையில், 1942ம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு, ஆகஸ்ட் புரட்சி உள்ளிட்ட பல்வேறு சுதந்திர போராட்டங்களில் ஈடுபட்டு 18 மாதங்கள் சிறைவாசம் அனுபவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் 1946ம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராகவும், 1952ம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்தெடுக்கப்பட்ட இவர். 1954 முதல் 1957 வரை தமிழக கங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராகவும் பொறுப்புவகித்ததுடன். தமிழக முதல்வராக காமராஜர் தலைமையில் அமைந்த காங்கிரஸ் ஆட்சியில் 1957 முதல் 1967 வரை 10 ஆண்டுகள் பொது பணித்துறை, காவல்துறை, சிறைத்துறை, ஹரிஜன மக்கள் நலத்துறை, அறநிலையத்துறை என 12 துறைகளுக்கு அமைச்சராக இருந்துள்ளார்.
மேலும் இவர் அமைச்சராக இருந்த போது மேட்டூர், மற்றும் வைகை அணைகள் கட்டப்பட்டதோடு, அவர் விவசாய அமைச்சராகப் பொறுப்பில் இருந்த காலத்தில், இரண்டு விவசாயப் பல்கலைக் கழகங்கள் தமிழகத்தில் துவக்கப்பட்டன. இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக 1981 டிசம்பர் மாதம் 23 ல் சென்னையில் உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து, தியாகி கக்கன் நாட்டுக்கு ஆற்றியப் பணிகளைப் பாராட்டி, இந்திய அரசு இவரின் உருவப்படம் பதித்த சிறப்பு அஞ்சல் தலையை 1999ம் ஆண்டு வெளியிட்டுக் கௌரவப்படுத்தியது.,
மேலும், 2001 ஆம் ஆண்டு தியாகி கக்கன் பிறந்த ஊரான மேலூர் அருகே தும்பைப்பட்டியில், முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியின் உத்தரவின் பேரில் மணிமண்டபம் கட்டப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் தியாகி கக்கனின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளன்று அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு வரும் நிலையில், 116ஆம் ஆண்டு பிறந்த தினத்தையொட்டி, அரசின் சார்பில் மாவட்ட ஆட்சியர் சங்கீதா, ஊராட்சி மன்ற தலைவர் ஆயுப்கான் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் தியாகி கக்கனின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதுடன், அவரின் நினைவு மண்டபத்தை பார்வையிட்டு நினைவு கையேட்டில் பதிவிட்டனர்....