நத்தம் தொகுதியில் 11,780 ஹெக்டேரில் மா விவசாயம்

நத்தம் தொகுதியில் 11,780 ஹெக்டேரில் மா விவசாயம்

மாமரம் 

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் சுமார் 11780 ஹெக்டேரில் மாம்பழங்கள் சாகுபடி செய்யப்படுகிறது.
மாவட்டத்தில் நத்தம், பழநி,வடமதுரை, ஆத்துார், அய்யம்பாளையம், அய்யலுார் உள்ளிட்ட பகுதிகளில் மா விவசாயம் அதிகப்படியாக நடக்கிறது.இதில் அதிகப்படியாக நத்தம் வட்டத்தில் 6800 ஹெக்டர், சாணார்பட்டி வட்டத்தில் 4980 ஹெக்டர் என நத்தம் தொகுதியில் 11780 ஹெக்டேரில் மா விவசாயம் செய்யப்பட்டுள்ளது. இங்கு மட்டும் 14 லட்சத்திற்கும் மேற்பட்ட மா மரங்கள் உள்ளதால் மாநிலத்தில் அதிகம் மா விவசாயம் செய்யும் பகுதிகளில் ஒன்றாக நத்தம் திகழ்கிறது. இதனால் இப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரமாக மா விவசாயம் உள்ளது.

Tags

Next Story