11 -ம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கியது!

11 -ம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கியது. பெரம்பலூர் மாவட்டத்தில் 7673 மாணவ - மாணவிகள் 35 மையங்களில் தேர்வு எழுதுகின்றனர்.
தமிழகம் முழுவதும் 11 ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 4ஆம் தேதி இன்று தொடங்கி, வருகிற மார்ச்.25ம் தேதி வரை தேர்வு நடைபெற உள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தம் 79 பள்ளிகளில் இருந்து 3850 மாணவர்களும் 3823 மாணவிகளும் என மொத்தம் 7673 பேர் 35 தேர்வு மையங்களில் தேர்வு எழுதுகின்றனர். இதில் பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பொதுத்தேர்விற்கு மாணவர்கள் ஆர்வமுடன் தேர்வுகு வந்தனர். தேர்வு காலை 9:45 மணிக்கு மாணவர்கள் தேர்வு அறைக்கு அனுப்பப்பட்டு.10 மணிக்கு வினாத்தாள் கொடுக்கப்பட்டன. முதல் 10 நிமிடம் வினாத்தாள் படிக்க நேரம் ஒதுக்கப்பட்டு பின்னர், தேர்வை எழுதினார்கள் மாவட்டம் முழுவதும் தேர்வு மையத்தினை கண்காணிக்க ஆறு பறக்கும் படை மற்றும் நிலையான பறக்கும் படை உறுப்பினர்கள் 62 பேர் நியமிக்கப்பட்டனர். அரை கண்காணிப்பாளர்கள் தேர்வறையை கண்காணித்து வருகின்றனர். முன்னதாக தேர்வு எழுத செல்லும் மாணவ - மாணவிகளுக்கு ஆசிரியர்கள் போதுமான அறிவுரை செய்து தேர்வரைக்கும் அனுப்பி வைத்தனர். இதில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் ஆசிரியரின் உதவியோடு தேர்வை எழுதுகின்றனர்.

Tags

Next Story