ரூ.12 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை

வெள்ளகோவிலில் ரூ.12 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை
வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் சூரியகாந்தி விதை விற்பனை நடைபெற்றது. அதன்படி நேற்று சந்தைக்கு மார்க்கம்பட்டி, கோட்டைப்பட்டி, களத்தூர், பாறையூர் ஆகிய இடங்களில் இருந்து விவசாயிகள் 443 மூட்டை களில் 22 டன் விதைகளை விற்பனைக்கு கொண்டு வந்து இருந்தனர். காரமடை, சித்தோடு, பூனாச்சியை சேர்ந்த வணிகர்கள் இவற்றை வாங்குவதற்காக வந்து இருந்தனர். கிலோ ரூ.43.02 முதல் ரூ.59. 31 வரை விற்பனையானது. ஒட்டுமொத்த விற்பனை தொகை ரூ.12 லட்சத்து 18 ஆயிரத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை ஆனது. அந்தந்த தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டதாக திருப்பூர் விற்பனை குழு முது நிலை செயலாளர் எஸ். சண்முகசுந்தரம் தெரிவித்தார். ஏல ஏற்பாடுகளைவிற்பனை கூட கண்காணிப்பாளர் சி. மகுடேஸ்வரன் செய்திருந்தார்.
Next Story