12-ம் வகுப்பு மாணவி பாலியல்

12-ம் வகுப்பு மாணவி பாலியல்
X
குளச்சல் போலீஸ் வழக்கு
குமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி அந்த பகுதியில் உள்ள பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் மாலையில் பள்ளி முடிந்ததும் அருகில் உள்ள ஒரு டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட்டில் டைப்பிங் கற்க சென்று வருவது வழக்கம். டைப்பிங் பயிற்சி செல்லும்போது அதே பகுதியை சேர்ந்த வாலிபர் தனிஸ் (25) என்பவர் உடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 4 மற்றும் 5 தேதிகளில் சிறுமியை தனிஸ் பஸ் நிறுத்தத்திற்கு வருமாறு அழைத்துள்ளார். பின்னர் அங்கிருந்து தனது பைக்கில் ஏற்றிக்கொண்டு அருகே உள்ள குக்கிராமத்தில் உள்ள ஒரு பள்ளியின் பின்புறம் உள்ள தோப்பில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதை சிறுமி யாரிடமும் கூறவில்லை. இருப்பினும் அவரது நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதை கவனித்த அவரது தாயார் விசாரணை நடத்தினார். அப்போது தனிஸ் சிறுமியை பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. உடனடியாக சிறுமியின் தாயார் குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். போலீசார் விசாரணை நடத்தினர். இதை அறிந்த தனிஸ் தலைமறைவாகி விட்டார். இதை அடுத்து தனுசை போலீசார் தேடி வருகின்றனர். வாலிபர் தனுஸ் - க்கு திருமணமாகி கைக்குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story