12 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய அதிமுக ஊராட்சி மன்றதலைவரை கையும்களவுமாக கைது செய்த லஞ்ச ஒழிப்புத்துறையினர்.

12 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய அதிமுக ஊராட்சி மன்றதலைவரை கையும்களவுமாக கைது செய்த லஞ்ச ஒழிப்புத்துறையினர்.
X
12 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய அதிமுக ஊராட்சி மன்றதலைவரை கையும்களவுமாக கைது செய்த லஞ்ச ஒழிப்புத்துறையினர்.
ஆம்பூர் அருகே கிராம ஊராட்சியில் நிலத்தின் வரைப்படம் மற்றும், வீட்டுமனைக்காக ஒப்புதல் பெற 12 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய அதிமுக ஊராட்சி மன்றதலைவரை கையும்களவுமாக கைது செய்த லஞ்ச ஒழிப்புத்துறையினர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மேல் சாணாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் இவர் மேல் சாணாகுப்பம் ஊராட்சி மன்ற தலைவராக உள்ள நிலையில், வாணியம்பாடி ஜனதாபுரம் பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் அதிபரான ஏ.கே. சீனிவாசன் என்பவர் மேல் சாணாங்குப்பம் பகுதியில் 7 ஏக்கர் அளவில் நிலத்தில் வீட்டுமனை அமைப்பதற்காக நிலத்தின் வரைபடம் மற்றும் டி.டி.சி.பி, ஒப்புதல் பெற மேல் சாணாங்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் சிவக்குமாரை அனுகியுள்ளார், அப்பொழுது நிலத்திறக்கு ஒப்புதல் அளிக்க சிவக்குமார் 12 லட்சம் ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார், அப்பொழுது ஏ.கே.சீனிவாசன் 10 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார், மேலும் மீதமுள்ள இரண்டு லட்சம் ரூபாயை கொடுக்கும்படி தொடர்ந்து தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் இன்று வாணியம்பாடியில் வைத்து, ஏ.கே.சீனிவாசன், சிவக்குமாரிடம், ரசாயனம் தடவிய 2 லட்சம் கொடுக்க முயன்ற போது மறைந்திருந்த திருப்பத்தூர் லஞ்ச ஒழிப்புத்துறை துணை காவல் கண்காணிப்பாளர் ராஜூ மற்றும் ஆய்வாளர் கௌரி தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் ஊராட்சி மன்ற தலைவர் சிவகுமாரை கையும்களவுமாக கைது செய்து, அருகில் இருந்த வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்திற்கு சிவக்குமாரை அழைத்து வந்து அவரிடம் மேலும் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்..
Next Story