12 மோட்டார்சைக்கிள்களை திருடிய 2 பேர் கைது.

X

ஆரணி பகுதியில் திருடிய மோட்டார்சைக்கிள்கள் பறிமுதல் செய்து 2 பேரையும் கைது செய்த போலீஸார்
ஆரணி, ஆரணி அடுத்த இரும்பேடு பைபாஸ் சாலையில் புதன்கிழமை வாகன தணிக்கை செய்துகொண்டிருந்த ஆரணி கிராமிய போலீஸார் 12 மோட்டார்சைக்கிள்களை திருடிய 2 பேரை கைது செய்தனர். ஆரணி கிராமிய இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கார்த்திகா தலைமையில் எஸ்.ஐ அருண்குமார் மற்றும் போலீஸார் ஆரணி இரும்பேடு பைபாஸ் சாலையில் வாகன தணிக்கை செய்துகொண்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படியான 2 நபர்கள் மோட்டார்சைக்கிளில் சென்றவர்களை விசாரணை செய்தபோது முன்னுப்பின் முரணாக பதில் கூறினர். இதனால் அவர்களை ஆரணி கிராமிய காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை செய்தனர். விசாரணையில் ஆரணி அடுத்த பார்வதிஅகரம் கிராமத்தைச் சேர்ந்த ரவி மகன் அண்ணாமலை(22), நடுக்குப்பம் கிராமத்தைச்சேர்ந்த தண்டபாணி மகன் சுரேஷ்(27) என தெரியவந்தது. மேலும் இவர்கள் ஆரணி சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு இடங்களில் மோட்டார்சைக்கிள்களை திருடியது தெரியவந்தது. இதனால் தொடர்ந்து விசாரணை செய்து 12 மோட்டார்சைக்கிள்களையும் போலிஸார் பறிமுதல் செய்தனர். பின்னர் இரண்டு பேரையும் கைது செய்தனர்.
Next Story