முன்னாள் சிறப்பு டி.ஜி.பி மேல்முறையீட்டு மனு மீது 12-ந்தேதி தீர்ப்பு.

முன்னாள் சிறப்பு டி.ஜி.பி மேல்முறையீட்டு மனு மீது 12-ந்தேதி தீர்ப்பு.


ராஜேஷ்தாஸ்


முன்னாள் சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸ் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு வரும் 12-ம் தேதி வழங்கப்படுகிறது.

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடந்த 2021-ம் ஆண்டு டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற் கொண்டிருந்தார். அப்போது பாதுகாப்பு ஆலோசனை என்ற பெய ரில் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு அப்போதைய சிறப்பு டி.ஜி.பி.யாக இருந்த ராஜேஷ்தாஸ், பாலியல் தொல்லை அளித்த தாக கூறப்படுகிறது, இதுதொடர்பாக பெண் அதிகாரி அளித்த புகாரின்பேரில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ் மற்றும் அவரது உத்தரவின்பேரில் பெண் அதிகாரியின் காரை வழிமறித்து கார் சாவியை பிடுங்கிய செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் ஆகியோர் மீது விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இவ்வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன் றத்தில் நடந்து வந்த நிலையில் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாசுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரத்து 500 அபராதமும், செங்கல்பட்டு முன்னாள் போலீஸ் சூப்பிரண்டுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டு கடந்த ஆண்டு தீர்ப்பு கூறப்பட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து இருவரும், விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்தனர். இம்மனுக்கள் மீதான விசாரணையின்போது செங்கல்பட்டு முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு தரப்பு வக்கீல்கள் ஏற்கனவே வாதிட்டு முடித்தனர். ஆனால் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ் தரப்பு வக்கீல்கள், இம்மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை விழுப்புரம் கோர்ட்டில் விசாரிக்கக்கூடாது என்றும் வேறு கோர்ட்டுக்கு மாற்றும்படியும் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளனர். அந்த மனு விசாரணையில் இருந்து வருகிறது. இதனிடையே நேற்று இம்மேல்முறையீட்டு மனு, விழுப்புரம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ் நேரில் ஆஜரானார். மேலும் அவரது வக்கீல்கள் ஆஜராகி, இம்மேல்முறையீட்டு மனுவை வேறுநீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்த நிலையில் அம்மனு மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், அதுவரை விழுப்புரம் நீதிமன்றத்தில் இம்மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று ஐகோர்ட்டு கூறியுள்ளதாக வாதிட்டனர். அதற்கு ஐகோர்ட்டு உத்தரவு நகலை ஏன் சமர்பிக்கவில்லை என்று நீதிபதி பூர்ணிமா கேள்வி எழுப்பியதற்கு ராஜேஷ்தாஸ் தரப்பு வக்கீல்கள், வாய்மொழியாக உத்தரவு பிறப்பித்ததாக கூறினர். இதை கேட்டறிந்த நீதிபதி பூர்ணிமா, அரசு தரப்பு வக்கீலிடம் இதுபற்றி கேட்டார். அதற்கு ஐகோர்ட்டு வாய்மொழி உத்தரவு பிறப்பித்ததாக அரசு தரப்பு வக்கீல் கூறினார். இதையடுத்து இம்மனுவை விசாரித்த நீதிபதி பூர்ணிமா, இம்மனு மீது வருகிற 12-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்தார்.

Tags

Next Story