தபால் நிலையங்களில் 12 மணி நேர ஆதார் சேவை

தபால் நிலையங்களில் 12 மணி நேர ஆதார் சேவை

ஆதார் திருத்தம் 

தூத்துக்குடி கோட்டத்தின் தலைமை தபால் நிலையங்களில் ஆதார் பதிவு மற்றும் திருத்தம் செய்யும் வகையில் 12 மணி நேரம் சேவை வழங்கப்பட்டுள்ளது. 
தூத்துக்குடி, திருச்செந்தூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் தலைமை தபால் நிலையங்களில் ஆதார் பதிவு மற்றும் திருத்தம் செய்யும் வசதி தினமும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஏற்பாடு முற்றிலும் பொது மக்களின் வசதிக்காகவும், வேலைக்கு செல்வோரின் ஆதார் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் பயனடையும் வகையிலும் செய்யப்பட்டுள்ளது. இந்த சேவைகளை அனைத்து தரப்பு பொது மக்களும் தங்கள் ஆதார் தேவைகளைப் பெற பயன் படுத்திக்கொள்ளுமாறு தூத்துக்குடி முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் முனிகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story