சரக்கு வாகனம் புளியமரத்தில் மோதிய விபத்தில் 12 பேர் காயம் !

சரக்கு வாகனம் புளியமரத்தில் மோதிய விபத்தில்  12 பேர் காயம் !

காவல் நிலையம்

சரக்கு வாகனம் புளியமரத்தில் மோதிய விபத்தில் 12 பேர் காயம். விபத்து குறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விராலிமலை: ராஜகிரி குளவாய்பட்டியில் கூத்தாண்டம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் கும்பாபிஷேகம் சில நாட்களுக்கு முன்பு நடந்த நிலையில் இப்போது மண்டலாபிஷேக விழா தினமும் பல்வேறு கிராமமக்களால் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் மாலைவல்லக்கோன்பட்டி கிராமத்தின் சார்பில் மண்டலாபிஷேகம் நடந்தது. இதில் கலந்து கொண்டுவிட்டு கிராமத்தை சேர்ந்த 15 பேர் சரக்கு வாகனத்தில் நள்ளிரவில் ஊர் திரும்பினர். காக்காகுடி காலனி அருகே வந்தபோது, ஆடு குறுக்கே ஓடியதால் சரக்கு வாகன டிரைவர் கோபால்(35) பிரேக் அடித்தார். இதனால், கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலை யோரம் இருந்த புளியமரத்தின் மீது மோதியது. இதில் வல்லக்கோன்பட்டியை சேர்ந்த ராஜகோபால்(45), ராஜகோபால் மகன் வாசன்(12), தங்கவேல் மகன் லட்சுமணன்(14), நல்லுச்சாமி மனைவி சின்னம்மாள் (70), கோபால் மனைவி கிரிஷா (25), பாலசுப்பிரமணியன்(45), ராஜகோபால் மனைவி மாரிக்கண்ணு (40), மகன் திரிஷன் (15), தங்கவேல் மகள் திவ்யா (12), தாரணி (5), கீர்த்தி (4), துரை மகள் சோபியா (16) உட்பட 12 பேருக்கு காயம் ஏற்பட்டது. அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் விரைந்து வந்து காயமடைந் தவர்களை மீட்டு விராலிமலை அரசு மருத்துவம் னைக்கு அனுப்பி வைத்தனர். கை,கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்ட 4 சிறுவர்,சிறுமிகள் மேல் சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்து குறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story