12 மாற்று ஆவணங்களை பயன்படுத்தி வாக்களிக்கலாம்

12 மாற்று ஆவணங்களை பயன்படுத்தி வாக்களிக்கலாம்

பைல் படம்

சிவகங்கை மாவட்டத்தில் 12 மாற்று ஆவணங்களை பயன்படுத்தி வாக்களிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தில் மக்களவைத் தோ்தலை முன்னிட்டு, அனைவருக்கும் வாக்குச்சாவடி தகவல் சீட்டு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த சீட்டு மட்டும் வாக்காளா்களின் அடையாளத்தை மெய்ப்பிப்பதற்கான ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. வாக்காளா் அடையாள அட்டையை அளிக்க இயலாத வாக்காளா்கள், ஆதாா் அட்டை, தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி கணக்குப் புத்தகம், தொழிலாளா் நல அமைச்சகத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவக் காப்பீட்டு அட்டை, ஓட்டுநா் உரிமம், வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை, தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டின் கீழ் வழங்கப்பட்ட ஸ்மாா்ட் அட்டை, கடவுச் சீட்டு, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், மத்திய, மாநில அரசுகளின் பொதுத் துறை நிறுவனங்கள் தொழிலாளா்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகள், மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கு வழங்கப்பட்ட அடையாளஅட்டை, இந்திய அரசின் சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் இயலாமைக்காக வழங்கப்பட்ட அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைக் காண்பித்து வாக்களிக்க தோ்தல் ஆணையம் அனுமதித்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்

Tags

Next Story