12ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம்: ஆட்சியர்
மாவட்ட ஆட்சியர்
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வரும் ஏப்ரல்19ம் தேதி அன்று பாராளுமன்றப் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை அளிக்க இயலாத வாக்காளர்கள், 12 வகையான ஆவணங்களை பயன்படுத்தி வாக்களிக்கலாம் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி ஆதார் அட்டை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அடையாள அட்டை, புகைப் படத்துடன் கூடிய வங்கி அஞ்சலக கணக்குப்புத்தகங்கள், மருத்துவ காப்பீட்டு அட்டை ஓட்டுநர் உரிமம். வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை ஸ்மார்ட் அட்டைஉள்ளிட்ட ஆவணங்களை கொண்டு வாக்களிக்கலாம்,
எனவே அடையாள அட்டை இல்லாத வாக்காளர்கள் இந்த 12 ஆவணங்களில் ஏதேனும் ஒரு ஆவணத்தை வாக்குச்சாவடி மையத்திற்கு எடுத்துச்சென்று தங்களது வாக்கினை பதிவு செய்யலாம் என்று மாவட்ட தேர்தல் அலுவலருமான மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம், வெளியிட்டுள்ள தகவலில் தெரிவித்துள்ளார்