கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 4 பேருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை

கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 4 பேருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை

வண்டலூர் - மீஞ்சூர் புறவழிச்சாலை பாலத்தின் அடியில் சரக்கு வாகனத்தில் கஞ்சா கடத்த முயன்ற நான் கு பேருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 

வண்டலூர் - மீஞ்சூர் புறவழிச்சாலை பாலத்தின் அடியில் சரக்கு வாகனத்தில் கஞ்சா கடத்த முயன்ற நான் கு பேருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

பூந்தமல்லி அருகேவண்டலூர் - மீஞ்சூர் புறவழிச்சாலை பாலத்தின் அடியில் சரக்கு வாகனத்தில் கஞ்சா மறைத்து கடத்தப்படுவதாக கடந்த 2020 ஜன.5-ம் தேதி சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து அங்கு நின்று கொண்டிருந்த விருதுநகர் மாவட்ட பதிவெண் கொண்ட சரக்கு வாகனத்தை போலீஸார் சோதனையிட்டபோது, அதில் மொத்தம்205 கிலோ கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

போலீஸாரின் விசாரணையில், ஆந்திராவில் இருந்து சென்னைக்கு சரக்கு வாகனத்தில் கஞ்சாவை கடத்திவந்த தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்த சுதாகர் (36), கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஷம்சீர் (29), அகிலேஷ் (28) மற்றும் ஷூஐப் (25) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை போதைப்பொருள் கடத்தல் தடுப்புஇரண்டாவது கூடுதல் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜெ.ஜூலியட் புஷ்பா முன்பாக நடந்தது. அப்போது அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் என்.நந்தகோபால் ஆஜராகி வாதிட்டார். வழக்கைவிசாரித்த நீதிபதி, குற்றம்சாட்டப்பட்ட 4 பேருக்கும் தலா 12 ஆண்டு கள் கடுங்காவல்சிறை தண்டனை மற்றும் தலா ரூ.1.20 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித் துள்ளார்.

Tags

Next Story