12,304 பயனாளிகளுக்கு 53 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்
Sivagangai King 24x7 |22 Jan 2025 7:20 AM GMT
சிவகங்கையில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டையும் விழா பேருரை ஆற்றினார்.
சிவகங்கையில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டையும் விழா பேருரை ஆற்றினார். இரண்டு நாள் சுற்றுப்பயணமாக சிவகங்கை மாவட்டம் வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல் நாள் நிகழ்ச்சியாக நேற்று காரைக்குடியில் நடந்த பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இரண்டாம் நாளான இன்று (ஜன.22), சிவகங்கை மன்னர் துரைச்சிங்கம் அரசு கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்றவர், முடிவுற்ற திட்ட பணிகளையும், புதிய திட்ட பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவையும் காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். காரைக்குடியில் 50 இலட்ச மதிப்பீட்டில கவியரசு முடியரசனார் சிலை அமைக்க புதிய திட்ட பணிக்கான அடிக்கல், 106.90கோடியில் மருது பாண்டியரின் திரு உருவ சிலையைராணி வேலு நாச்சியார் மண்டபம் அருகே அமைக்க அடிக்கல் நாட்டுதல், 50 இலட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற திட்ட பணியான வாளுக்கு வேலி அம்பலத்தின் மணி மண்டபம் மற்றும் உருவச் சிலை திறப்பு போன்ற பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். மேலும்,வேளாண், கல்வி, ஊனமுற்றோர், ஆதிதிராடர் நலத்துறை உட்பட பல்வேறு துறைகளை சேர்ந்த 12,304 பயனாளிகளுக்கு 53 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
Next Story