கோவில் உண்டியல்கள் மூலம் 1.25 லட்சம் காணிக்கை வசூல்

கோவில் உண்டியல்கள் மூலம் 1.25 லட்சம் காணிக்கை வசூல்

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில்

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் உண்டியலில் ரூ.1.17 லட்சத்தை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் உள்ள திருப்பணி உண்டியல் மற்றும் அன்னதான உண்டியல், கன்னியாகுமரி சன்னிதி தெருவில் உள்ள விசுவநாதர் கோவில், விவேகானந்தபுரம் சக்கர தீர்த்த காசி விஸ்வநாதர் கோவில், கன்னியாகுமரி ரயில் நிலைய சந்திப்பில் உள்ள குகநாதீஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களின் உண்டியல்கள் ஒரே நாளில் திறந்து எண்ணப்பட்டது. நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த், நாகர்கோவில் இந்து அறநிலையத்துறை ஆய்வாளர் சரஸ்வதி ஆகியோர் முன்னிலையில் இந்த உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. இதில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் உள்ள திருப்பணி உண்டியல் மூலம் ரூ. 35 ஆயிரத்து 346 ம், அன்னதான உண்டியல் மூலம் ரூபாய் 81 ஆயிரத்து 659ம், காணிக்கை வசூலானது. இதே போல கன்னியாகுமரி சன்னதியில் உள்ள விசுவநாதர் கோவில் உண்டியல் மூலம் ரூபாய் 10 ஆயிரத்து 380-ம், விவேகானந்தபுரம் சக்கர தீர்த்த காசி விஸ்வநாதர் கோயிலில் ரூபாய் 13 ஆயிரத்து 92 -ம், கன்னியாகுமரி ரயில் நிலைய சந்திப்பில் உள்ள குகநாதீஸ்வரர் கோயிலில் உண்டியல் மூலம் ரூபாய் 36 ஆயிரத்து 872 வசூலானது.

Tags

Next Story