ரூ12.60 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாயவிலை கடைக்கு அடிக்கல் நாட்டினார் எம்எல்ஏ
திருவள்ளூர் அழிஞ்சிவாக்கம் ஊராட்சியில் ரூ.12.60 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாயவிலை கடை, பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகர் அடிக்கல் நாட்டினார். திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியத்தில் அடங்கிய அழிஞ்சிவாக்கம் ஊராட்சியில் சமூக மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.12.60 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கடை அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது, இவ்விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் நந்தினி ரமேஷ் தலைமை வகித்தார், சோழவரம் ஒன்றிய திமுக செயலாளர் செல்வசேகரன், துணைத் தலைவர் ஜானகிராமன், உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர், இதில் சிறப்பு அழைப்பாளராக பொன்னேரி தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் துரை சந்திரசேகர் கலந்து கொண்டு புதிய நியாய விலை கடை அமைக்க பூமி பூஜையை துவக்கி வைத்தார்,
Next Story





