போலியாக போலீஸ் ஸ்டிக்கர்கள் ஒட்டிய வாகனங்கள் - அதிரடியாக பறிமுதல் செய்த காவல்துறை

போலியாக போலீஸ் ஸ்டிக்கர்கள் ஒட்டிய வாகனங்கள் - அதிரடியாக பறிமுதல் செய்த காவல்துறை

போலியாக போலீஸ் ஸ்டிக்கர்கள் ஒட்டிய வாகனங்கள்

சமூக ஆர்வலர்களின் கோரிக்கையை அடுத்து சோதனை மேற்கொண்டனர்
தென்காசி மாவட்டத்தில் போலீசார் வாகன சோதனையின் போது தப்பிப்பதற்காக வாகன ஓட்டிகள் சிலர் போலியாக தங்களது மோட்டார் சைக்கிளில் போலீஸ் என்ற ஸ்டிக்கர்களை ஒட்டிக் கொண்டு திரிவதாகவும், அதனை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கும் படியும் சமூக ஆர்வலர்கள் புகார் கூறிவந்தனர். அதன்பேரில் போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் மாவட்டம் முழுவதும் வாகன சோதனை மேற்கொண்டு அதனை கண்டுபிடிக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து ஆலங்குளம், பாவூர்சத்திரம், தென்காசி மற்றும் பல்வேறு இடங்களில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அரசு போலீஸ் வாகனங்கள் அல்லாது பிற தனியார் 2 மற்றும் 4 சக்கர வாகனங்களில் போலியாக போலீஸ் என்று ஸ்டிக்கர் ஒட்டியவர்களை கண்ட றிந்து அதனை கிழித்தனர். இவ்வாறாக 127 வாகனங்களில் இருந்து போலீசாரால் ஸ்டிக்கர்கள் அகற்றப்பட்டது. மீண்டும் இதேபோல் போலியாக வாகனங்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டி சுற்றினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் அவர்களை எச்சரித்து அனுப்பினர்.

Tags

Next Story