சிவகங்கையில் பொதுத்தேர்வு: உற்சாகத்துடன் மாணவர்கள் பங்கேற்பு

சிவகங்கையில் பொதுத்தேர்வு: உற்சாகத்துடன் மாணவர்கள் பங்கேற்பு

தேர்வு எழுத சென்ற மாணவர்கள்

சிவகங்கை மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை மாணவர்கள் உற்சாகமாக எழுதினர்.

சிவகங்கை மாவட்டத்தில் +2 தேர்வை 15ஆயிரத்து 107 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். தமிழகம் முழுவதும் +2 தேர்வு இன்று தொடங்கி மார்ச் 22ஆம் தேதி வரை நடக்கிறது.

இத்தேர்வை சிவகங்கை மாவட்டத்தில் 68 அரசுப்பள்ளிகள், 22 அரசு உதவி பெறும் பள்ளிகள், 53 மெட்ரிக் பள்ளிகள் உள்பட 163 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் அரசுப்பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள 36தேர்வு மையங்கள் உள்பட மொத்தம் 81தேர்வு மையங்களில், ஆண்கள் 6 ஆயிரத்து 800பேர், பெண்கள் 8ஆயிரத்து 307பேர் உட்பட மொத்தம் 15ஆயிரத்து 107பேர் +2 தேர்வை எழுதுகின்றனர்.

இத்தேர்வு கண்காணிப்பில் 81முதன்மை கண்காணிப்பாளர்கள், 81 கல்விதுறை அலுவலர்கள், 25க்கும் மேற்பட்ட வழித்தட அலுவலர்கள் மற்றும் 10க்கும் மேற்பட்ட பறக்கும் படை குழுவினர் ஈடுபட்டுள்ளனர். தனித்தேர்வர்களுக்கு மாவட்டத்தில் 6 தேர்வு தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. 224தனித்தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர். மாவட்டம் முழுவதும் தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லும் வகையில் பல்வேறு மையங்களில் வினாத்தாள்கள் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.

Tags

Next Story