விஜய் வித்யாலயா கலை கல்லூரியில் 12வது பட்டமளிப்பு விழா

தர்மபுரியில் ஸ்ரீ விஜய் வித்யாலயா கலை அறிவியல் மகளிர் கல்லூரியில் நடந்த 12-வது பட்டமளிப்பு விழாவில் 2500 மாணவிகள் பட்டம் பெற்றனர்

தர்மபுரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நல்லம்பள்ளியில் உள்ள ஸ்ரீ விஜய் வித்யாலயா கலை அறிவியல் மகளிர் கல்லூரி 12- வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு ஸ்ரீ விஜய் வித்யாலயா கல்வி நிறுவனங்களின் தலைவர் டி.என்.சி. மணிவண்ணன் தலைமை தாங்கி பட்டமளிப்பு விழாவை தொடங்கி வைத்துப் பேசினார்.

கல்லூரி துணைத் தலைவர் எம். தீபக் மணிவண்ணன் வரவேற்று பேசினார். தாளாளர் செல்வி மணிவண்ணன், செயலாளர் டாக்டர் ராம்குமார், இயக்குனர் டாக்டர் திவ்யா ராம்குமார், கல்லூரி நிர்வாக அலுவலர் கே. விக்ரமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தர்மபுரி ஸ்ரீ விஜய் வித்யாலயா கலை அறிவியல் மகளிர் கல்லூரி முதல்வர் கே. பாலசுந்தரம், கிருஷ்ணகிரி ஸ்ரீ விஜய் வித்யாலயா கலை அறிவியல் மகளிர் கல்லூரி முதல்வர் பி. வேலுசாமி, ஸ்ரீ விஜய் வித்யாலயா கல்வியியல் கல்லூரி முதல்வர் டி. ஷகின்பானு ஆகியோர் ஆண்டறிக்கை வாசித்தனர்.

கல்வி ஆலோசகர் ஹமிதா பானு தங்கப்பதக்கம் மற்றும் தரவரிசை பட்டியலில் சாதனை படைத்த மாணவிகள் பற்றிய விவரங்களை அறிவித்தார்.விழாவில் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி டாக்டர் ஏ. கலியமூர்த்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பட்டங்களை வழங்கி, கல்வியின் முக்கியத்துவம் குறித்து மாணவிகளுக்கு ஆலோசனைகள் வழங்கி பேசினார்.

இந்த விழாவில் பல்கலைக்கழக அளவில் தங்கப் பதக்கங்கள் பெற்று சாதனை படைத்த 28 மாணவிகள், தரவரிசை பட்டியலில் பல்கலைக்கழக அளவில் சாதனை படைத்த 242 மாணவிகள் உள்பட கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளைச் சேர்ந்த 2500 மாணவிகள் பட்டம் பெற்றனர். விழாவில் கல்லூரி நிர்வாகிகள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். முடிவில் கல்லூரி வேலைவாய்ப்பு அலுவலர் முனிவேல் நன்றி கூறினார்.

Tags

Next Story