குமரிக்கு 12-ம் தேதி உள்ளூர் விடுமுறை

குமரிக்கு 12-ம் தேதி உள்ளூர் விடுமுறை
கலெக்டர் ஸ்ரீதர்
கன்னியாகுமரி, மண்டைக்காடு அருள்மிகு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக் கொடைவிழாவினை முன்னிட்டு 12ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மண்டைக்காடு அருள்மிகு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக் கொடைவிழாவினை முன்னிட்டு 12.03.2024 (செவ்வாய் கிழமை) அன்று கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது.

12.03.2024 அன்று அறிவிக்கப்பட உள்ள உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக 2024 ஏப்ரல் திங்கள் முதல் சனிக்கிழமை (06.04.2024) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்படி உள்ளூர் விடுமுறையினை துய்க்கும் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாள் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர், அறிவித்துள்ளார்.

Tags

Next Story