13 வது நாளாக தொடரும் சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம்

13 வது நாளாக தொடரும் சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம்

13 வது நாளாக தொடரும் சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம்

ஊதிய உயர்வு தொழிற்சங்க அங்கீகாரம் எட்டு மணி நேர வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 13 வது நாளாக சாம்சங் தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.




காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் சாம்சங் இந்தியா நிறுவனம் செயல்பட்டு வருகிறது இதில் 1500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வரும் நிலையில், கடந்த 9ம் தேதி முதல் ஊதிய உயர்வு தொழிற்சங்க அங்கீகாரம் மற்றும் எட்டு மணி நேர வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று 13 வது நாளாக தொடர் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் ஊழியர்களின் குடும்பத்தினர் இடையே தொழிற்சாலை மனித வள மேம்பாட்டு நிர்வாக அதிகாரிகள் தொலைபேசியில் வேலைக்கு திரும்ப அழுத்தம் தருவதாகவும் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர். கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் எனவும் தொழிற்சங்கங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சமரச பேச்சுவார்த்தையின் ஈடுபட்டும் தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவது நிர்வாகத்திற்கு எதிரானது. பணிக்கு வருபவர்களை தடுத்து போராட்டத்தில் ஈடுபடுத்துவது கண்டனத்துக்குரியது. உடனடியாக பணிக்கு திரும்பாவிட்டால் திங்கட்கிழமை முதல் அடையாள அட்டை முடக்கப்படும் என சாம்சங் தொழிற்சாலை நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் வேலை செய்யவில்லை என்றால் சம்பளம் இல்லை சாம்சங் ஊழியர்களுக்கு samsung நிறுவனம் எச்சரிக்கை. விடுத்துள்ளது தொடர்ந்து வேலை செய்யவில்லை என்றால் ஊதியம் இல்லை எனவும், கடிதம் கிடைத்த மூன்று நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் எனவும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் ஊழியர்கள் சட்ட விரோதமாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக நிர்வாகம் புகார் தெரிவித்துள்ளது13 வது நாளாக தொடரும் சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம்

Tags

Next Story