13வது தேசிய சீனியர் பாரா வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டிகளை துவக்கி வைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

X
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடுகே எஸ் ஆர் கல்வி நிறுவன வளாகத்தில் 13வது தேசிய சீனியர் பாரா வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டிகள் நேற்று முதல் துவங்கியது. பாரலிம்பிக் கமிட்டி ஆப் இந்தியா தமிழ்நாடு பாரா வாலி அசோசியேசன் ஆகியவை இணைந்து நடத்தும் இந்த தேசிய அளவிலான போட்டிகளில் 16 மாநிலங்களைச் சேர்ந்த 24 ஆண்கள் போட்டிகள்,17 பெண்கள்போட்டிகள் நடக்க உள்ளது. ஹரியானா, பாண்டிச்சேரி, மகாராஷ்டிரா, பீகார், தமிழ்நாடு, ஜார்கண்ட், வெஸ்ட் பெங்கால், தெலுங்கானா, கர்நாடகா, ஆந்திர பிரதேசம் ஹிமாச்சல் பிரதேஷ், ஒடிசா, ராஜஸ்தான், உத்திர பிரதேசம், கேரளா, உத்தர் காண்ட்,ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 16 அணிகளும் ராஜஸ்தான் ஆந்திரா ஒடிசா கர்நாடகா தமிழ்நாடு ஹரியானா ஜார்கண்ட் தெலுங்கானா உத்தரகாண்ட் மாநிலங்களைச் சேர்ந்த 9 பெண்கள் அணியும்இந்தப் போட்டியில் கலந்து விளையாடி வருகின்றனர்.லீக் போட்டிகளின் இரண்டாவது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது போட்டிகளை நாமக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா துவக்கி வைத்தார் ஆண்கள் பிரிவில் ஒவ்வொரு அணியும் மூன்று மூன்று அணிகளுடன் விளையாட வேண்டும் பெண்கள் பிரிவிலும் ஒவ்வொரு அணியும் மூன்று அணிகளுடன் விளையாட வேண்டும் பெரும் புள்ளிகள் அடிப்படையில் காலு இறுதி அரையிறுதி இறுதிப்போட்டி ஆகியவற்றுக்கு தகுதி பெறுவார்கள் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறும் அணிகளுக்கு முதல் பரிசாக 35 ஆயிரம் ரூபாயும் இரண்டாவது பரிசாக 25000 மூன்றாவது பரிசாக 20000 நாலாவது பரிசாக ₹15,000 வெற்றி கோப்பைகளும் வழங்கப்படும் என விழா குழுவினர் தெரிவித்தனர்.இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணிகள் மற்றும் சிறந்த விளையாட்டு வீரர்கள் உலக அளவிலான சிட்டிங் வாலிபால் போட்டியில் கலந்து கொண்டு விளையாட உள்ளனர் என விளையாட்டு குழுவினர் தெரிவித்தனர் இன்று நடந்த பெண்கள் போட்டியில் கர்நாடகா மற்றும் தமிழ்நாடுஅணிகள் விளையாடின இதில் இரண்டு நேர் செட்களில் அதிகபுள்ளிகளை பெற்ற கர்நாடகா அணி வெற்றி பெற்றது. ஆண்கள் பிரிவில் நடந்த போட்டியில் ஆந்திரா மற்றும் ஒரிசா அணிகள் மோதினர் இதில் இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற செட் கணக்கில் ஆந்திரா அணியினர் வெற்றி பெற்றனர்.தொடர்ந்து நாளை மாலை வரை லீக் போட்டிகளும் இதனைத் தொடர்ந்து கால் இறுதி ஆறு இறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் நடைபெற்று மாலையே பரிசளிப்பு விழாவும் நடக்க உள்ளது.
Next Story

