பறக்கும் படை சோதனையில் 13கிலோ வெள்ளி பறிமுதல்

பறக்கும் படை சோதனையில் 13கிலோ வெள்ளி பறிமுதல்

பறக்கும் படை சோதனையில் 13 கிலோ வெள்ளி பறிமுதல்

தாராபுரம் அருகே நடைபெற்ற தேர்தல் பறக்கும் படையினரின் சோதனையில் உரிய ஆவணம் இன்றி மதுரையிலிருந்து கோவை கொண்டு செல்லப்பட்ட 15-லட்சம் மதிப்புள்ள 13-கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல்.

நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதை ஒட்டி வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுப்பதற்காக தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தாராபுரத்தை அடுத்த குண்டடம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக மதுரையிலிருந்து கோவை சென்ற காரை சோதனை செய்தனர். அப்போது கோவை மாவட்டம் கலம்பாளையம் பகுதியைச் சேர்ந்த மருதாச்சலம் என்பவர் உரிய ஆவணம் இன்றி 15-லட்சம் மதிப்புள்ள 13-கிலோ வெள்ளி வளையல்கள் வெள்ளி ,தோடுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். உரிய ஆவணங்கள் இல்லாததால் தேர்தல் பறக்கும் படையினர் தாராபுரம் கோட்டாட்சியர் செந்தில் அரசனிடம் ஒப்படைத்தனர்.

Tags

Next Story