மாவட்டத்தில் கல்வி சுற்றுலா செல்ல 13 ஆசிரியர்கள் தேர்வு

கனவு ஆசிரியர் தேர்வில் 25 சதவீதத்திற்கு குறையாமல் மதிப்பெண்கள் பெற்று தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த 13 ஆசிரியர்கள் கல்வி சுற்றுலா செல்ல உள்ளனர்.

அரசுப்பள்ளி மாணவ, மாணவி களுக்கு ஆசிரியர்கள் சிறப்பாக கல்வி கற்பிக்க தேவையான பல்வேறு நடவடிக்கைகளை தமி ழக அரசு எடுத்து வரு கிறது. ஆசிரியர்களை ஊக்குவிக்க அரசு பல் வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வரிசையில், கனவு ஆசி - ரியர் விருது வழங்கப்ப டுகிறது. நடப்பு கல்வி யாண்டுக்கான கனவு ஆசிரியர் விருதுக்கான - தேர்வு, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் அண்மையில் நடத்தப்பட்டது. அரசுப் பள்ளி ஆசிரியர்கள் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த தேர்வில் 3 ஆயிரம் ஆசிரியர்கள் தேர்வாகியுள்ளனர். இவ்வாறு தேர்வான ஆசிரியர்களில் 90 சதவீதத்துக்கும் குறையாமல் மதிப்பெண் பெற்ற 55 ஆசிரியர்கள் சுவீடன், பின்லாந்து ஆகிய நாடு களுக்கு கல்விச் சுற்றுலாவாக அழைத்துச் செல்லப்படவுள்ளனர். அதேபோல, 90 சதவிதத்துக்கும் கீழ் 75 சதவீதத்துக்கும் குறையாமல் மதிப்பெண் பெற்ற 325 ஆசிரியர்கள், வரும் 26, 27ம்தேதி ஆகிய தேதிக ளில் 2 குழுக்களாக டேராடூனுக்கு விமானம் மூலம் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட வுள்ளனர்.கனவு ஆசிரியர் தேர்வு மூலம் கல்விச் சுற்றுலா செல்ல தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசி ரியர்களின் பெயர்ப் பட்டியல் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங் களுக்கு பள்ளிக் கல்வித் துறை மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், தர்மபுரி மாவட்டத்தில் மாங்கரை அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ஆசி ரியர் ஜெகதீஸ்வரன், கம்பைநல்லூர் அரசு ஆண் கள் மேல்நிலை பள்ளி ஆசிரியர் உமேஷ், முண்டாசு புறவடை அரசு நடுநிலைப் பள்ளி ஆசி ரியர் மனோ, காளேக வுண்டனூர் அரசு நடு நிலைப் பள்ளி ஆசிரியர் அனிதா, அமுதா, பெரி யாம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி ஆசிரியர் இளமுருகன், தர்மபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நி லைப் பள்ளி ஆர்த்தி, தர்மபுரி கோட்டை உருதுப் பள்ளிஷாமா சுல்தானா,தொட்லான அள்ளி அரசு நடுநிலைப் பள்ளி கலைவாணி, வேலனூர் அரசு தொடக்கப் பள்ளியைச் சேர்ந்த ஜான் பீட்டர், கவிப்பிரியா. பென்னாகரம் அரசு தொடக்கப் பள்ளியைச் சேர்ந்த உஷா நந்தினி, பாலக்கோடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த செந்தில், செல்வம் ஆகிய 13 ஆசிரியர்கள் டேராடூனுக்கு கல்விச் சுற்றுலா செல்ல தேர்வாகியுள்ளோர். பட்டியலில் இடம்பெற் றுள்ளனர்.இப்பட்டியலில் உள்ள ஆசிரியர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கைகள் ஏதே னும் மேற்கொள்ளப் பட்டுள்ளதா, ஏதே னும் நடவடிக்கைகள் நிலுவையில் உள்ளதா என்ற விவரங்களையும் பள்ளிக் கல்வி இயக்குநரகத்துக்கு அனுப்ப தர்மபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் மூலம் சேகரித்து வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story