பட்டாசு ஆலை வெடி விபத்தில் 131பேர் உயிரிழப்பு: எஸ் பி அலுவலகம்

பட்டாசு ஆலை வெடி விபத்தில் 131பேர் உயிரிழப்பு: எஸ் பி அலுவலகம்
மாவட்ட எஸ்பி
விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 131 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 131 நபர்கள் உயிரிழந்துள்ளனர். எஸ் பி அலுவலகம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் விருதுநகர் மாவட்டத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றனர்.

இந்த பட்டாசு ஆலைகளில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை நடந்த வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் விவரம் குறித்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிக்கை தாக்கல் செய்துள்ளார் .

விருதுநகர் மாவட்டத்தில் 2019 முதல் தற்போது வரை 69 பட்டாசு ஆலை விபத்துகள் நடந்துள்ளன. இதில், 131 தொழிலாளர்கள் இறந்துள்ளனர் மற்றும் 146 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மாவட்டத்தில் 1087 பட்டாசு தொழிற்சாலைகள் மற்றும் 2963 சில்லறை விற்பனை கடைகள் உள்ளன.

ஆலைகளில், உரிய பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்காதது, ரசாயன கலவையை முறையாக பயன்படுத்தாததால் அதிக விபத்து நடக்கிறது என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story