4 சட்டசபை தொகுதிகளில் 13.24 லட்சம் பேர் வாக்காளர்கள்

4 சட்டசபை தொகுதிகளில் 13.24 லட்சம் பேர் வாக்காளர்கள்

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு 

காஞ்சிபுரம் மாவட்டத்தில்உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளில் 13.24 லட்சம் வாக்காளர்கள் உள்ளது வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீட்டில் தெரியவந்தது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி, 13.24 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். கடந்த ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான 10 மாதங்களில், 27,000 பேர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம், 2024க்கான பணிகள் தற்போது துவங்கியுள்ளது. அதன்படி, தமிழகம் முழுதும் வரைவு வாக்காளர் பட்டியல் அந்தந்த மாவட்டங்களில் நேற்று வெளியிடப்பட்டன. காஞ்சிபுரம் மாவட்டத்தில், கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட aatchiyarகலைச்செல்வி வெளியிட, மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் முதல் பிரதியை பெற்றுக் கொண்டார். வாக்காளர் பட்டியல் இதைத் தொடர்ந்து, அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சியினர், கலெக்டர் கலைச்செல்வியிடம், வரைவு வாக்காளர் பட்டியலை பெற்றுக் கொண்டனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில், நேற்று வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியல் விபரப்படி, 13,24,581 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 6,44,802 பேர் ஆண்களும், 6,77,597 பெண்களும், 182 பேர் மூன்றாம் பாலினத்தவரும் ஆவர். மேலும், 1,500க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் கொண்ட ஓட்டுச்சாவடி மையங்களை பிரிக்க தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

Tags

Next Story