133 ஏக்கர் பரப்பளவில் நீர்வள ஆதாரத்துறை கட்டுப்பாட்டின் ஏரி தண்ணீர் தட்டுப்பாடு

133 ஏக்கர் பரப்பளவில் நீர்வள ஆதாரத்துறை கட்டுப்பாட்டின்  ஏரி தண்ணீர் தட்டுப்பாடு
X
வட கிழக்கு பருவ மழை காலங்களில் பெய்யும் மழையின் போது ஏரியில் தேங்கி நிற்கும் தண்ணீர் சீமை கருவேல மரங்களால் விரைந்து உறிஞ்சப்பட்டு வற்றி விடுகிறது
பெரம்பலூர் வட்டம், செங்குணம் கிராமத்தில் 133 ஏக்கர் பரப்பளவில் நீர்வள ஆதாரத்துறை கட்டுப்பாட்டின் கீழ் ஓர் ஏரி உள்ளது. இந்த ஏரியில் சீமை கருவேல மரங்கள் ஆண்டு கணக்கில் நன்கு வளர்ந்து அடர்ந்து ஆக்கிரமித்து காணப்படுகிறது. வட கிழக்கு பருவ மழை காலங்களில் பெய்யும் மழையின் போது ஏரியில் தேங்கி நிற்கும் தண்ணீர் சீமை கருவேல மரங்களால் விரைந்து உறிஞ்சப்பட்டு வற்றி விடுகிறது. இதனால் எதிர் காலத்தில் ஏரியின் அருகில் உள்ள விவசாய நிலங்களின் மண்ணின் தரம் பாதிக்கப்படும் நிலையும், குடிநீர் தட்டுபாடு ஏற்படும் அபாய நிலையும் ஏற்படும் நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
Next Story