133 பேருக்கு பணி ஆணை

X
சின்னசேலத்தில் முதல்வரின் வீடுகள் மறு கட்டுமான திட்டத்தின் கீழ் ரூ.3.59 கோடி மதிப்பில் பயனாளிகளுக்கு வீடு கட்ட பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பி.டி.ஓ., அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய சேர்மன் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். பி.டி.ஓ., சுமதி முன்னிலை வகித்தார். துணை பி.டி.ஓ., பன்னீர்செல்வம் வரவேற்றார்.ஊரகப்பகுதிகளில் கடந்த 2001ம் ஆண்டுகளுக்கு முன், அரசு திட்டங்களின் கீழ் கட்டப்பட்ட வீடுகளில், தற்போது சீரமைக்க முடியாமல் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள வீட்டின் உரிமையாளர்களுக்கு புதிய வீடு கட்ட ரூ.2.70 லட்சம் நிதி வழங்கப்படுகிறது. அதன்படி, சின்னசேலம் ஒன்றியத்தில், இத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்ட 133 பயனாளிகளுக்கு, ஒன்றிய சேர்மன் சத்தியமூர்த்தி பணி ஆணை வழங்கினார்.
Next Story

