அங்கன்வாடி ஊழியா்கள் 133 போ் கைது

அங்கன்வாடி ஊழியா்கள் 133 போ் கைது

அங்கன்வாடி ஊழியர்கள் கைது

மறியலில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியா்கள் 133 பேரை போலீசார் கைது செய்தனர்.
தென்காசியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்கள் சங்கங்களின் கூட்டமைப்பினா் 133 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா். திமுக அளித்த தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது, சத்துணவு ஊழியா்களுக்கு சிறப்பு ஓய்வூதியம் ரூ. 6ஆயிரத்து 750 வழங்குவது, அரசுத் துறை காலிப்பணியிடங்களில் சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்களை காலமுறை ஊதியத்தில் நியமனம் செய்வது, காலை உணவுத் திட்டத்தை சத்துணவு ஊழியா்கள் மூலமாக நிறைவேற்றுவது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், தென்காசி புதிய பேருந்து நிலையம் பகுதியில் இப் போராட்டம் நடத்தப்பட்டது. இப் போராட்டத்திற்கு கூட்டமைப்பின் தலைவா் ராசையா தலைமை வகித்தாா். நிதிக் யகாப்பாளா் கோவில்பிச்சை கோரிக்கையை விளக்கிப் பேசினாா். சத்துணவு ஊழியா் சங்க மாநிலச் செயலா் பிச்சுமணி தொடங்கி வைத்து பேசினாா். சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியா் சங்க மாநில தலைவா் நாராயணன் நிறைவுரையாற்றினாா். மறியலில் ஈடுபட்ட 133 பேரை போலீஸாா் கைதுசெய்தனா்.

Tags

Next Story