காஞ்சிபுரம் மாவட்டத்தில் 133 பேர் துப்பாக்கிகள் ஒப்படைப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 133 பேர் துப்பாக்கிகள் ஒப்படைப்பு

எஸ்.பி.சண்முகம்

துப்பாக்கி உரிமம் வைத்திருந்த 133 நபர்கள் தேர்தல் நன்னடத்தை விதி காரணமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒப்படைப்பு.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் துப்பாக்கி உரிமம் வைத்திருந்த 133 நபர்கள் தேர்தல் நன்னடத்தை விதி காரணமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளதாகவும், பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் காவல்துறை செயல்படும் என எஸ்.பி.சண்முகம் தகவல் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்களுக்கான ஆலோசனை கூட்டம் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் ஆட்சியர் கலைச்செல்வி மற்றும் எஸ் பி சண்முகம் தலைமையில் நடைபெற்றது. இதில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் தேர்தல் பிரச்சாரம் பொதுக்கூட்டம், வாகனம் அனுமதி உள்ளிட்டவை குறித்து மேற்கொள்ள வேண்டிய நன்னடத்தை விதிகள் என அனைவருக்கும் எடுத்துரைக்கப்பட்டது.

இதனையடுத்து செய்தியாளிடம் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகம் , காஞ்சிபுரம் மாவட்ட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 144 நபர்கள் துப்பாக்கி உரிமம் பெற்று வைத்துள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதி காரணமாக தற்போது 133 நபர்கள் ஒப்படைத்துள்ளதாகவும், 11 நபர்கள் வங்கி பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளதால் அவர்கள் அதிலிருந்து விலக்கல் கேட்டு கடிதம் அளித்துள்ளனர். தேர்தல் பொதுக் கூட்டத்திற்கு முதலில் விண்ணப்பித்தவருக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும், கொடிகள் பொருத்தவரை சாலையின் நடுவே நடுவதை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் கொடிகளை அகற்றிக் கொள்ள வேண்டும் எனவும் அனைத்திற்க்கும் , உதவி தேர்தல் அலுவலர் அனுமதி பெற்று கூட்டம் நடத்த வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு துணை ராணுவ வீரர்கள் வருகை இன்னும் ஓரிரு நாளில் இறுதி செய்யப்படும் எனவும் அதனைத் தொடர்ந்து கொடி அணி வகுப்பும் நடைபெறும் என தெரிவித்தார். மேலும் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் காவல்துறை செயல்படும் எனவும், 100% வாக்குப்பதிவிற்கான விழிப்புணர்வையும் காவல்துறை மேற்கொள்ளும் எனவும் தெரிவித்தார்.

Tags

Next Story