1330 குறட்பாக்களையும் மனனம் செய்து ஒப்பிக்கும் பள்ளி மாணவர்களுக்கு ரூ.15,000 பரிசு வழங்கப் படவுள்ளது

1330 குறட்பாக்களையும் மனனம் செய்து ஒப்பிக்கும் பள்ளி மாணவர்களுக்கு ரூ.15,000 பரிசு வழங்கப் படவுள்ளது
ஆட்சியர் அறிவிப்பு
பெரம்பலூர் மாவட்டத்தில் 1330 குறட்பாக்களையும் மனனம் செய்து ஒப்பிக்கும் பள்ளி மாணவர்களுக்கு ரூ.15,000 பரிசு வழங்கப் படவுள்ளது - மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தகவல். தமிழக அரசால் “திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசுத்” திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. 1330 குறட்பாக்களையும் மனனம் செய்து ஒப்பிக்கும் பள்ளி மாணவரகளுக்குத் தலா ரூ.15,000 ரொக்கப் பரிசாகத் தமிழ் வளர்ச்சித்துறையால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றது. அதனடிப்படையில் 2024-2025 ம் ஆண்டில் இத்திட்டத்தின் கீழ் போட்டியில் பங்கேற்கும் பள்ளி மாணவர்கள் 1330 குறட்பாக்களையும் ஒப்பிக்கும் திறன்கொண்ட மாணவர்களாக இருக்க வேண்டும். இயல் எண், அதிகாரம் எண், குறள் எண், போன்றவற்றை தெரிவித்தால் அதற்கான திருக்குறளை சொல்லும் திறன் பெற்றவராக இருக்க வேண்டும். திருக்குறளின் அடைமொழிகள், சிறப்புகள், சிறப்புப்பெயர்கள் போன்றவற்றையும் அறிந்திருக்க வேண்டும். இப்போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் பள்ளி மாணவர்கள் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்றுக்கொள்ளலாம். 20.09.2024 அன்று மாலைக்குள் விண்ணப்பம் அளித்திட வேண்டும். இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு 04328-225988 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Next Story