காஞ்சிபுரத்தில் 1,37,700 நபர்களுக்கு மிக்ஜாம் புயல் நிவாரண தொகை

காஞ்சிபுரத்தில் 1,37,700 நபர்களுக்கு மிக்ஜாம் புயல் நிவாரண தொகை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1,37,700 நபர்களுக்கு மிக்ஜம் புயல் நிவாரண தொகை வழங்கப்பட்டது.  

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1,37,700 நபர்களுக்கு மிக்ஜம் புயல் நிவாரண தொகை வழங்கப்பட்டது.

கடந்த 4 ஆம் தேதி மிக்ஜம் புயலால் சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் செங்கல்பட்டு மாவட்டங்களில் பொதுமக்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகினர்.இந்நிலையில் தமிழக அரசு சார்பில் நிவாரண உதவியாக குடும்ப அட்டைதாரர் களுக்கு 6000 ரூபாய் வழங்கப்படும் எனவும் அறிவித்திருந்தது.

அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர் வட்டத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் மேவளூர்குப்பம் கச்சிப்பட்டு சிவன்தாங்கல் உள்ளிட்ட வருவாய் கிராம பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கும் 6000 நிவாரண தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் வட்டத்தில் படப்பை ஊராட்சிக்குட்பட்ட கீழ்படைப்பை என்ற பகுதியில் முதல் கட்டமாக வெள்ள பாதிப்பு அடைந்த பகுதிகளுக்கு சென்று அதிகாரிகள் டோக்கன் வினியோகம் செய்து வருகின்றனர்.கூட்டுறவு சங்க அலுவலர்கள் 252 நபர்களும், வருவாய்த்துறை அதிகாரிகள் 200 நபர்களும் மாவட்டம் முழுவதும் டோக்கன்கள் விநியோகம் செய்து வருகின்றனர் இரு தினங்களில் டோக்கன்கள் வினியோகம் பணிகள் முடிவடையும் என வருவாய் துறை அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.

குன்றத்தூர் வருவாய் வட்டத்தில் 91 கிராமங்களும் ஸ்ரீபெரும்புதூர் வருவாய் வட்டத்தில் மூன்று கிராமங்களிலுள்ள ஒரு லட்சத்து 37 ஆயிரத்து எழுநூறு குடும்பங்களுக்கு இந்த நிவாரணத் தொகை வழங்கப்பட உள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளது.தொடர்ந்து அரசு அறிவித்த நிவாரணத் தொகை பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் முறையாக வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story