மதுரை ஏவி மேம்பாலத்திற்கு 138 பிறந்தநாள் விழா

மதுரை ஏவி மேம்பாலத்திற்கு 138 பிறந்தநாள் விழா
X
ஆல்பர்ட் விகடர் பாலம் 
மதுரை ஏவி மேம்பாலத்திற்கு 138 பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

மதுரை ஏ.வி.மேம்பாலம் எப்போது பாரம்பரிய சின்னமாகும்..? - 138ஆவது பிறந்த நாளில் ஆர்வலர்கள் கோரிக்கை மதுரையின் நூற்றாண்டு பெருமை வாய்ந்த ஆல்பர்ட் விக்டர் மேம்பாலத்தை பாரம்பரிய நினைவுச் சின்னமாக அறிவிக்க தமிழக அரசு தேவையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அது குறித்த ஒரு சிறப்பு தொகுப்பு. வைகை ஆறு பாய்வதால் மதுரை இயற்கையாகவே வடகரைப்பகுதி தென்கரைப் பகுதி என இரண்டாக பிரிகிறது. முன்னர் மக்கள் படகுகள் மூலமே வைகை ஆற்றை கடந்து இரண்டு பகுதிகளுக்கும் சென்று வந்தனர். அதன் அடிப்படையில் தான் வைகைக் கரையில் இருந்த பல படித்துறைகளின் பெயர்கள் அவை அழிந்தாலும் கூட இன்றளவும் பொதுமக்களால் அழைக்கப்பட்டு வருகின்றன பொதுமக்களின் வசதியை முன்னிட்டு இவ்விரு பகுதிகளையும் இணைக்கும் பாலம் ஒன்று கட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

பாலம் ஒன்றைக் கட்ட அன்றைய பிரிட்டிஷ் அரசால் மூன்று லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டுமான பணிகள் 1884ஆம் ஆண்டு துவங்கி 1886ஆம் ஆண்டில் பாலம் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்து விட்டது. பாலம் கட்ட செலவுத் தொகை ரூ.2,85,697 ஆனதாகவும். மீதத் தொகை ரூ14,303 அரசு கருவூலத்தில் சேர்க்கப்பட்டதாகவும் ஆங்கிலேயர் கால ஆவணங்கள் தெரிவிக்கின்றன. இ

துகுறித்து வைகை நதி மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ராஜன் கூறுகையில், ஆங்கிலேயர்களின் மேற்பார்வையில் இந்த பாலம் கட்டப்பட்டாலும் தமிழர்களின் கட்டுமான முறைப்படி சுண்ணாம்பு, கடுக்காய், கருப்பட்டி போன்ற பொருட்கள் சேர்க்கப்பட்டு பாலம் கட்டப்பட்டது. பாலம் 40 அடி அகலமும் 820 அடி நீளமும் கொண்டதாகவும், அடிப்பகுதியில் 16 வட்ட வளைவு தூண்களைக் கொண்டதாகவும் அமைக்கப்பட்டது.

இப்பாலம் 50 ஆண்டுகள் நிலைத்து நிற்கும் என்ற கட்டுமான உறுதி மொழி அளிக்கப்பட்ட நிலையில், தறபோது கூடுதலாக 88 ஆண்டுகள் கடந்தும் உறுதித் தன்மையுடன் மதுரை வாழ் மக்களின் இன்றைய பயன்பாட்டிலும் இருந்து வருகிறது. பாலம் கட்டி முடிக்கப்பட்டவுடன் திறந்து வைப்பதற்காக வருகை தர விருந்த பிரிட்டிஷ் இளவரசர் ஆல்பர்ட் விக்டர், அச்சமயம் மதுரையில் பரவிய ப்ளேக் நோய் காரணமாக தனது பயணத்தை ரத்து செய்தார். பாலத்தை கட்டிய பொறியாளர் திறந்து வைக்க, பிரிட்டிஷ் இளவரசர் ஆல்பர்ட் பிட்டரின் பெயரே இந்த பாலத்திற்கு சூட்டப்பட்டது என்றார். மேலும் வைகை நதி மக்கள் இயக்கத்தின் பொறுப்பாளர்களும் சமூக ஆர்வலர்களுமான ராமசுப்பிரமணியன் மற்றும் பார்த்தசாரதி ஆகியோர் கூறுகையில், மதுரை அடையாளமாக திகழும் ஆல்பர்ட் விக்டர் மேம்பாலத்தை தமிழக அரசு, பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும். தென்கரையிலிருந்து 2, 7, 8ஆவது வளைவு தூண்களின் அடிப்பகுதி உதிர்ந்து காணப்படுவதால் தமிழக அரசின் நெடுஞ்சாலைத துறை பழைய கட்டுமான முறைப்படி பூச்சு பூசி பாதுகாக்க முன்வர வேண்டும். அரசு அதிகாரிகளின் கவனக் குறைவினால் தார்ச் சாலைகள் பாலத்தின் மேற்புறம் அடுக்கு அடுக்காக சேர்ந்து பாலத்தின் சுமை கூடி அதன் உறுதித் தன்மைக்கு கேடு விளைவிக்கின்றது.

பாலத்தின் மேல் பகுதியில் புதிய தார் சாலைகள் அமைக்கும் போது அடிப்பகுதியில் உள்ள சாலை சுரண்டி அப்புறப்படுத்திவிட்டு புதிய தார்ச்சாலை அமைக்க வேண்டும். பாலத்தின் கைப்பிடி சுவர்கள் இடிந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. அவற்றை முழுமையாக சரி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஆல்பர்ட் விக்டர் மேம்பாலத்தில் 138 வது பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு சமூக ஆர்வலர்கள் ஒருங்கிணைந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

Tags

Next Story