புகையிலை பொருட்கள் விற்பனை செய்த, 139 உணவகங்களுக்கு 'சீல்'

புகையிலை பொருட்கள் விற்பனை செய்த, 139 உணவகங்களுக்கு சீல்

ஆட்சியர் அருண்ராஜ் 

செங்கல்பட்டு மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த, 139 உணவகங்களுக்கு சீல்' வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் : செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளி, கல்லுாரி நிறுவனங்கள் உள்ளன. இப்பகுதியில் உள்ள கடைகளில், மாவட்ட உணவு பாதுகாப்பு துறை, போலீசார் இணைந்து, கடந்த மார்ச் மாதம் முதல் சோதனை நடத்தினர். இந்த சோதனையில், 139 ஹோட்டல்களில் உள்ள கடைகளில், ஹான்ஸ், புகையிலை, கூலிப் உள்ளிட்ட புகையிலை பொருட்கள், 302 கிலோவை பறிமுதல் செய்து, 'சீல்' வைக்கப்பட்டது.

இதன் உரிமையாளர்களுக்கு, 42 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், இனி புகையிலை பொருட்களை விற்பனை செய்யமாட்டோம் என, உறுதிமொழி கடிதம் பெற்றுள்ளனர். புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தெரியவந்தால், உணவு பாதுகாப்புத் துறையின், 94440 42322 மற்றும் மாவட்ட காவல் துறையின், 72001 02104 'வாட்ஸாப்' எண்களில் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story