காங்கிரஸ் கட்சியின் 139வது ஆண்டு துவக்க விழா கொண்டாட்டம்

காங்கிரஸ் கட்சியின் 139வது ஆண்டு துவக்க விழா கொண்டாட்டம்

கொடியேற்றம் 

காங்கிரஸ் கட்சியின் 139வது ஆண்டு துவக்க விழாவையொட்டி சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்ட்டது.
நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியின் 139வது ஆண்டு துவக்க விழாவை காஙகிரசார் கொண்டாடினர். சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் முள்ளுவாடிகேட் கட்சி அலுவலகத்தில் மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமையில் கட்சி கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். இந்நிகழ்ச்சியில், மாநகர் மாவட்ட பொருளாளர் தாரை ராஜகணபதி,மாநகராட்சி துணைமேயர் சாரதாதேவி, சிறுபான்மை பிரிவு மாநில துணைத்தலைவர் அஸ்ரப் அலி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ஷாநவாஸ், மாநகர துணைத்தலைவர் மொட்டையாண்டி, விவசாய அணி தலைவர் சிவக்குமார், மண்டலக்குழு தலைவர்கள் சாந்தமூர்த்தி, நிசார் அகமது, ராமன், கோவிந்தராஜ், பெரியசாமி, இளைஞர் காங்கிரஸ் விஜயராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியின் முடிவில், காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு காங்கிரசார் அஞ்சலி செலுத்தினர்.

Tags

Next Story