ஞானமணி கல்வி நிறுவனங்களில் 13 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா
ஞானமணி கல்வி நிறுவனங்களில் 13ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. ஞானமணி கல்வி நிறுவனங்களின் தலைவர் முனைவர் தி.அரங்கண்ணல் பட்டமளிப்பு விழாவை துவக்கி வைத்தார். ஞானமணி தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் முனைவர் தி.கே.கண்ணன், ஞானமணி கல்வியியல் கல்லூரியின் டீன் முனைவர் ஆரோக்கியசாமி ஆகியோர் பட்டமளிப்பு விழா அறிக்கையினை சமர்ப்பித்தனர்.
ஞானமணி கல்வி நிறுவனங்களின் தாளாளர் ப.மாலாலீனா, துணைத் தலைவர் மதுவந்தினி அரங்கண்ணல், முதன்மை நிர்வாக அதிகாரி முனைவர் பி.பிரேம்குமார், கல்வி இயக்குநர் முனைவர் பி.சஞ்செய் காந்தி, டீன்- இரசாயன அறிவியல் முனைவர் வி.பாஸ்கரன், ஆராய்ச்சி இயக்குநர் முனைவர் எஸ்.செல்வராஜன், இன்னோவேசன் மற்றும் இன்குபேசன் ஆலோசகர் முனைவர் ஆர்.விஜயரங்கன், துனை முதல்வர் முனைவர் கே.சந்திரமோகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சிறப்பு விருந்தினராக சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி என்.கிருபாகரன் கலந்து கொண்டு மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.
அவர் பேசுகையில் எல்லா மொழிகளையும் மதிக்க வேண்டும் என்றும் அது தான் மக்களை ஒருங்கிணைக்கும் என்றும் பெற்றோர்களின் கடின உழைப்பிற்கு கிடைத்த பலன் தான் இன்று நீங்கள் பெற்ற பட்டம். இந்தியா ஒரு பசி, வறுமை மிக்க நாடு என்ற பிம்பத்தை உடைத்து எறிந்து அமெரிக்கா ஜெர்மனி, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு நிகராக உயர்ந்ததற்குக் காரணம் பொறியாளர்கள் தான் என்றும் ஒரு வருடத்திற்கு 15 இலட்சம் பொறியார்களை உருவாக்குகிறோம் என்றும் பேசினார். வேதாந்தா நிறுவனத்துடைய தலைவர் அகர்வால் கூறுகையில் அமெரிக்காவில் உள்ள சிலிக்கான் நிறுவனம் இந்தியாவில் உள்ள பொறியாளர்களைக் கொண்டு இந்தியர்களின் அறிவுத்திறன், புத்திக் கூர்மை, திறமையினாலே இயங்குகிறது. இன்றைய பொறியாளர்கள் திறன்கள் இல்லாத பட்டதாரிகளாக இருப்பதால்தான் வேலைவாய்ப்பு இல்லாமல் தவிக்கின்றனர். இன்றைய மாணவர்கள் ஆங்கில மொழித்திறன், பிரச்சினைகளைக் கையாளும் திறன், தலைமைப் பண்பு, குழு மேலாண்மை, சூழ்நிலைக்கு ஏற்றவாறு செயல்படுதல் போன்ற திறன்களை வளர்த்துக் கொள்வதன் மூலம் அவர்கள் தங்கள் துறையில் முதன்மையாக வளர வேண்டும் உலகளாவிய மொழியான ஆங்கிலத்தை தினமும் பயிற்சி செய்வதன் மூலம் வேலைவாய்ப்பை எளிதாக அடைந்து விட முடியும் என்று கூறினார்.
சுந்தர்பிச்சை, நாதெல்லா, அணுத்ராஜ் போன்ற வெளிநாட்டு நிறுவனங்களின் தலைவர்களாக இருக்கும் இந்தியர்கள் ஆங்கில மொழித்திறன் கொண்டே அவ்விடத்தை அடைந்தனர். அந்நிய செலவாணியில் இந்தியா வளர்ந்து வர காரணம் நமது பொறியாளர்களே ஆகும். செயற்கை நுண்ணறிவு. கிளவுட் கம்யூட்டிங், டி என் ஏ போன்ற துறைகள் வளர்ந்து கொண்டு வருகின்றது. ஆங்கில மொழித்திறன் மற்றும் மேன்திறன் ஆகியவற்றை கற்பதன் மூலம் 15 சதவீதத்தில் இருந்து 46 சதவீதமாக வேலைவாய்ப்பு உயர்ந்துள்ளது. உங்களுடைய திறன்களை மேன்மேலும் வளர்த்து கொள்வதன் மூலம் உங்கள் மதிப்பை வெளியுலகத்தில் மெருகூட்டி காண்பிக்கலாம். பணத்திற்கு முக்கியத்துவம் தராமல் கிடைக்கின்ற வாய்ப்பை பயன்படுத்தி தலைமைப்பண்பு முடிவெடுக்கும் திறன் ஆகியவற்றை வளர்த்துக் கொள்வதன் மூலம் மாணவர்கள் தங்கள் துறையில் தலைச்சிறந்து விளங்க முடியும் என்றார். இந்நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளைச் சார்ந்த மொத்தம் 741 மாணவ மாணவிகள் பட்டம் பெற்றனர். இதில் உணவு தொழில்நுட்பத்தை சார்ந்த பி.தேன்மொழி பல்கலைக்கழக அளவில் 2 இடம் பெற்றுள்ளார். 82 பேர் முதுகலை பட்டமும் 659 பேர் இளநிலைப் பட்டம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.கல்லூரியின் தலைவர் டாக்டர் தி.அரங்கண்ணல் நன்றி கூறினார். இந்த நிகழ்வில் பட்டம் பெறும் மாணவ, மாணவிகள் பெற்றோர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.