ஸ்ரீ சிவியார் மாரியம்மன் கோவிலில் 13வது நாள் சிறப்பு பூஜை
மாரியம்மன் கோவில்
சங்ககிரி:ஸ்ரீ சிவியார் மாரியம்மன் கோயிலில் 13வது நாள் சிறப்பு பூஜை.
சேலம் மாவட்டம், சங்ககிரி, பழைய எடப்பாடி சாலை பகுதியில் உள்ள ஸ்ரீ சிவியார் மாரியம்மன் கோயில் பங்குனி மாத பொங்கல்விழாவின் 13வது நாளையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. சங்ககிரி நகர் பழைய எடப்பாடி சாலை பகுதியில் உள்ள ஸ்ரீ சிவியார் மாரியம்மன் கோயிலில் பங்குனி மாத பொங்கல் விழா பிப்ரவரி 19ம் தேதி கம்பம் நடுதல் வைபவத்துடன் தொடங்கியது. அதனையடுத்து சுவாமிக்கு தினசரி சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டது. விழாவின் 13வது நாளையொட்டி சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், திருமஞ்சனம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. இதில் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிப்பட்டுச் சென்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏப்.2ம் தேதி தீ சட்டிகள், அலகு குத்துதல், பூவினால் அலங்கரிக்கப்பட்ட கரகம் எடுத்து வருதலும், அன்றைய தினம் இரவு முப்பாட்டு தீபமும், ஏப்.3ம் தேதி புதன்கிழமை பொங்கல்விழாவும், ஏப்.4ம் தேதி வியாழக்கிழமை கம்பம் கிணற்றில் விடுதலும், மஞ்சள் நீராடுதல் வைபவமும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story