14 தினங்களுக்கு பின்பு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி. தொடர் விடுமுறை தினம் என்பதால் கும்பக்கரை அருவியில் குளித்து மகிழிந்த சுற்றுலா பயணிகள்
Periyakulam King 24x7 |26 Aug 2024 5:53 AM GMT
கும்பக்கரை அருவி
நீர் பிடிப்பு பகுதிகளில் மலைப்பொழிவு குறைந்ததால் கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து குறைந்து சீரான நிலையில் 14 தினங்களுக்கு பின்பு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி. தொடர் விடுமுறை தினம் என்பதால் கும்பக்கரை அருவியில் குளித்து மகிழிந்த சுற்றுலா பயணிகள் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கும்பக்கரை அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலை பகுதி, வட்டக்கானல், வெள்ளகெவி, பாம்பார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் விட்டு விட்டு கன மழை பெய்தது. இதனால் கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 12ம் தேதி முதல் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், அருவிக்கு செல்லவும், வனத்துறையினர் தடை விதித்தனர். இந்நிலையில் கடந்த மூன்ற நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பொழிவு முற்றிலும் இல்லாத நிலையில் அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்து நீர்வரத்து சீரானதால் 14 நாட்களுக்கு பின்பு இன்று சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதித்துள்ளனர். மேலும் தொடர் விடுமுறை என்பதால் , 14 நாட்களுக்கு பின்பு திறந்த கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணி ஆர்வத்துடன் உற்சாகத்துடனும் குளித்து மகிழ்ந்தனர்.
Next Story